பிரபல நடிகையுடன் காதல், ஹீரோவுடன் மோதல் என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர் சிம்பு.
ஆனால் சிம்புவின் சமீப கால நடவடிக்கைகள், இது சிம்பு தானா என்று கேட்கும் அளவுக்கு மாறியுள்ளதாம். சில நாட்களுக்கு முன் இமயமலைக்கு சென்று வந்தவர், தற்போது அனைவரிடமும் மிக பணிவுடன் நடந்து கொள்கிறாராம்.
முன்பெல்லாம் சிறிது நேரம் தாமதமானாலே வேலையாட்களை திட்டி தீர்த்தவர், இப்போது மரியாதையாக அழைப்பதுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனசு விட்டு பேசி வருகிறாராம். ஒருநாள் திடீரென தன் உதவியாளர்களை அழைத்து, உங்கள் குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் முழுவதையும் நானே கட்டுகிறேன் என கூறி ஆச்சரியத்தில் மூழ்கடித்தாராம்.
சிம்புவின் இந்த திடீர் மாற்றத்துக்கு, அவருக்குள் இருக்கும் காதல் தான் காரணம் என்று கூறுகின்றனர்.
காதலுக்காக இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறாரோ என கொலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !