யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவை அடுத்த சித்திரை புத்தாண்டு தினத்தில் ஆரம்பிக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
யாழ். பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றும் பேதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"30 வருட கால யுத்ததிற்கு பின்னர் வடக்கின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பல கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றார். ஏனைய மாகாணங்களை விட வடக்கின் அபிவிருத்தியில் கவனமெடுத்தே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தியை மேலும் வலுவடையச் செய்யக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக வட மாகாண சபைத் தேர்தல் உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்யும் போது அது மேலும் விரிவடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.
இந்த அரசாங்கம் உங்கள் கண்முன்னால் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து காட்டியிருக்கின்றது வீதி அபிவிருத்தி, மின்சாரம், புகையிரத பாதை புனரமைப்பு என்று பலவற்றைச் சொல்லலாம். ஆனால் பிரதேச சபைகளைக் கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த பிரதேச சபைகளால் ஒரு சிறிய வீதியைக் கூட போட முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
கடந்த காலத்தில் யாழில் இருந்து புகையிரதத்தின் மூலம் கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் ஒரு நெருக்கமான உறவைப் பேணக் கூடிய நிலைகாணப்பட்டது. இப்போது மறுபடியும் புகையிரதம் கிளிநொச்சி வரை வந்து செல்கின்றது எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தன்று யாழில் இருந்து கொழும்புக்கான புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்படும்" என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !