உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்தி இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மத்திய நிலையம் ஒன்றை தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் தம்புள்ளை - கல்வெட்டியாய பிரதேச வீடொன்றில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தை இயக்கிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கருக்கலைப்பு செய்துகொள்ள வரும் பெண்களிடம் குறித்த சந்தேகநபர் தலா 15,000 ரூபா கட்டணம் அறவிட்டு வந்துள்ளார்.
இது குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !