ஆறு வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தஒரு நிகழ்வு மீண்டும் இடம்பெறப் போவதாகஅரசல்புரசலான கதையொன்று கோடாம்பாக்கத்தில்உலாவுகின்றது.
இளைய தளபதி விஜய்மற்றும்அல்டிமேட் ஸ்டார் அஜீத் ஆகியோரது படங்கள் ஒன்றாகவெளிவருவதற்கான சாத்தியங்கள்
இவ்வருடம்தென்படுகின்றது. கடந்த 2007ஆம் ஆண்டு போக்கிரி,ஆழ்வார் திரைப்படங்கள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் 2013இல் அஜீத்தின் 53ஆவது படம், விஜயின் தலைவா மோதும்போல் தெரிகின்றது. தமிழ் சினிமாவில் நல்ல நண்பர்களாக இருக்கும் அஜீத் -விஜய் ஆகியோருக்கிடையில் திரைப்படங்கள் விடயத்தில் பனிப்போர்நிகழ்கின்றது. இதற்கு முக்கிய காரணம்
அவரது ரசிகர்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி,ரஜனி - கமல் வரிசையில் அடுத்த பெரும் தலைகளாக விஜய் - அஜீத் திகழ்வதால்இவர்களுக்கிடையிலான போட்டிகள் ஆச்சரியப்படுவதற்கில்லை. இருந்தும்,இவர்களும் சில காலத்திற்கு முன்னர்தங்கள் படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கிவசனங்கள் பேசியிருந்தாலும், தற்போது மிகவும் நல்ல நண்பர்களாக
திகழ்கின்றனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு போக்கிரி, ஆழ்வார் திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் 2013இல் அஜீத்தின் 53ஆவது படம், விஜயின் தலைவா மோதும்போல் தெரிகின்றது. தமிழ் சினிமாவில் நல்ல நண்பர்களாக இருக்கும் அஜீத் - விஜய் ஆகியோருக்கிடையில் திரைப்படங்கள் விடயத்தில் பனிப்போர்நிகழ்கின்றது. இதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி,ரஜனி - கமல் வரிசையில் அடுத்த பெரும் தலைகளாக விஜய் - அஜீத் திகழ்வதால் இவர்களுக்கிடையிலான போட்டிகள் ஆச்சரியப்படுவதற்கில்லை. இருந்தும்,இவர்களும் சில காலத்திற்கு முன்னர் தங்கள் படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கிவசனங்கள் பேசியிருந்தாலும், தற்போது மிகவும்நல்ல நண்பர்களாக திகழ்கின்றனர்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் இவ்வருட ஓகஸ்ட் மாதமளவில் ரிலீஸாகும் எனப் படத்தரப்பால் கூறப்பட்டது. இன்னும் படத்திற்குஉறுதியாக தலைப்பு எதையும் வைக்கவில்லை. பாடல்களும் இப்போதுவெளியாகும் போல் தெரியவில்லை. ஆனால், விஜயின் தலைவா திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்த ரிலீஸிற்கு தயாராகி பாடல்களும் கடந்த வாரம்வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைவா படத்தயாரிப்பாளர்சந்திரபிரகாஷ் ஜெய்ன், படத்தை ஓகஸ்ட் மாதமளவில் திரையிடஎண்ணியுள்ளார். ஒருவேளை, படங்கள் இரண்டும் ஒரே தினத்தில் வெளியானால் துருவங்களுக்கிடையிலான போர் ஒன்றினை தமிழ் சினிமா காண முடியும்.
தல - தளபதி, இடையிலான மோதல் இடம்பெறுவது இதுவொன்றும் புதிதல்ல.
கடந்த 2001 இல் தீனா - ப்ரெண்ட்ஸ் படங்களும், 2002 இல் வில்லன் - பகவதிபடங்களும், 2006 இல் பரமசிவன் - ஆதி படங்களும், 2007 இல் ஆழ்வார் - போக்கிரிபடங்களும்
வெளிவந்திருக்கின்றன. அதிகமான சந்தர்ப்பங்களில் ஒரு படம்ஹிட்டடிக்க மற்றைய படம் ஊற்றிக் கொண்டது. ஆனால், ப்ரெண்ட்ஸ் - தீனாபடங்கள் இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தன.
கதை நன்றாக இருந்தால்இம்முறை தலைவா - வலை, இரண்டுமே ஹிட்டடிக்கும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !