தயாரிப்பாளர் ஓ.கே சொன்னால் உடனே தலைவா படத்தை தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் நான் தைரியமாக ரிலீஸ் செய்யத்தயார் என்று அறிவித்திருக்கிறார் தி.மு.க எம்.எல்.ஏவும், தென் சென்னை திமுக மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனது அன்பு பிக்சர்ஸ் சார்பில் பல படங்களை வினியோகம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அமீர் டைரக்டர் செய்த ஆதிபகவன் படத்தையும் அவர் தான் தயாரித்தார்.
தலைவா படத்திற்கு யார் தரப்பிலிருந்து சிக்கல் வருகிறது? அதற்கு யாரை அணுகுவது? என்பதே தெரியாத நிலையி்ல் படத்தை திரையிடும் வழி தெரியாமல் தத்தளித்து வருகிறார் தயாரிப்பாளர்.
2 வாரங்களாகியும் தலைவா படம் ரிலீஸாகததால் மன அழுத்தத்துக்கு உள்ளான அவர் இன்று ஹாஸ்பிட்டலில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்விட்டது. இனிமேலும் தாமதித்தால் வசூல் சுத்தமாக வராது என்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் ஜெ.அன்பழகன் தானாக முன்வந்து தலைவாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரு தயாரிப்பாளரின் வலி என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். படத்தை எப்படித் திரையிடுவது என்பதும் எனக்குத் தெரியும். இந்த சவாலை ஏற்று தலைவா படத்தை எனது சொந்த ரிஸ்க்கில் வெளியிடவும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஜெ.அன்பழகன்.
தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் நெஞ்சுவலியால் வைத்தியசாலையில்!
சவாலை ஏற்று படத்துக்கு 300 தியேட்டர்கள்: ஜெ.அன்பழகன் அதிரடி அறிவிப்பு!
Written By TamilDiscovery on Saturday, August 17, 2013 | 4:13 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !