பதினொரு வயதே நிரம்பிய சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று தியத்தலாவையில் இடம்பெற்றுள்ளது.
தியத்தலாவைக்கு அண்மித்த பிரதேசத்தின் வயல் ஒன்றில் அமையப்பெற்றுள்ள பரண் ஒன்றிலிருந்தே மேற்படி பதினொரு வயது சிறுமியின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருப்பதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிகவும் மோசமான முறையில் கொடூரமாக மேற்படி சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கும் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
சடலம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தியத்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !