தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள பவர்லூம் டவுன் பகுதியை சேர்ந்தவர் காலிப் அஸ்ரப் முகமது. இவர் அங்குள்ள விசைத்தறி தொழிற்சாலையில் தங்கி வேலை செய்து வந்தார். அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை காலிப் அஸ்ரப் முகமது விசைத்தறி தொழிற்சாலைக்கு அழைத்து சென்று கற்பழித்தார்.
பின்னர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவளின் உடலை அங்குள்ள சிமெண்ட் பலகைக்கு அடியில் புதைத்துவிட்டு தப்பினார். இந்த சம்பவம் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி நடந்தது.
இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி காலிப் அஸ்ரப் முகமதுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தானே மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கே.ஆர்.வாரியர் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில் காலிப் அஸ்ரப் முகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !