வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராணி (40). இவரது கணவர் இறந்து விட்டார். ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இரவில் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நாகலிங்கம் என்பவரின் வீட்டின் முன் படுத்து தூங்கினார்.
நள்ளிரவு ராஜா மற்றும் 2 வாலிபர்கள் அந்தப் பக்கமாக வந்தனர். ராணி வெளியே தூங்குவதைப் பார்த்ததும் சபலம் ஏற்பட்டது. 3 பேரும் அவரை மாறிமாறி கற்பழித்தனர். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் வியாசர்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிவு செய்து 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்.
பாதிக்கப்பட்ட ராணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !