பெண் குழந்தை கல்விக்காக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள முதல் மலாலா
விருது இந்தியாவை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு
வழங்கப்பட்டுள்ளது. உ.பி. யை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முதலாவது மலாலா விருது வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காக போராடிய சிறுமி மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த மலாலா, லண்டனில் சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். நேற்று மலாலாவின் பிறந்தநாள். இந்த நாளை மலாலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. இந்த நாளில் குழந்தைகளின் கல்விக்காக போராடுபவர்களுக்கு மலாலா விருது வழங்கி ஐ.நா. கவுரவிக்க முடிவு செய்தது.
இதனையடுத்து முதல் மலாலா விருது, உ.பி. யை சேர்நத 15 வயது சிறுமி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசியா சுல்தானின் பெற்றோர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். முன்னதாக தனது 16வது பிறந்த நாளையோட்டி ஐக்கிய நாடுகள்
சபையில் பாகிஸ்தான் மலாலா யூசப்சாய் உரையாற்றினார். அப்போது தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான ஆயுதம் கல்வி மட்டுமே என அவர் தெரிவித்தார். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா இருந்தால் உலகையே மாற்றிவிடலாம் என மலாலா நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னாள் குழந்தை தொழிலாளியான இந்த சிறுமி, மீரட் பகுதியில் 48 குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்துள்ளார். இதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரை சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக போராடியதற்காகவும் விருது வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிரான தலிபான்கள் நடத்திய தாக்குதலை சந்தித்த மலாலாவை பெருமைப்படுத்தும் விதமாக ஜூலை 12ந் தேதியை மலாலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. வரும் காலங்களில் மலாலாவின் அனைத்து சமுதாய கல்வி பணிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !