கணவரை எரித்துக் கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானத்தில் வயல்வெளியில் 8ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது.
போலீஸ் விசாரணையில் இறந்தவர் காட்டுமன்னார்கோவில் அடுத்த வ. கொளக்குடி பகுதியைச் சேர்ந்த சேட்டு 36, என தெரியவந்தது. சேட்டு கொலை குறித்து அவரது மனைவி தேவகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவகிக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தாஸ் என்பவருக்குமிடையே கள்ளக்காதல் இருந்துள்ளது தெரியவந்தது. இதை சேட்டு கண்டித்துள்ளார். மேலும் குடித்து விட்டு தேவகியை அடித்து துன்புறுத்தியும் தன் மகள்கள் மூன்று பேரையும் இழிவாகவும் பேசியுள்ளார்.
இதனால், ஆத்திமடைந்த தேவகி தாஸ் உதவியுடன் சேட்டை கொலை செய்ய திட்டமிட்டார். 4ம் தேதி சேட்டை வேலைக்குச் செல்ல வேண்டும் என திருமூலஸ்தானம் வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தயாராக இருந்த தாஸ் சேட்டின் தலையில் மண்வெட்டி காம்பால் தாக்கியுள்ளார். பின் இருவரும் துண்டால் சேட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து தேவகி 24, தாஸ் 37, ஆகியோரை கைது செய்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !