வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியிருந்த 173 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்த நிதியின் மூலம் மொத்தமாக 120 கிலோமீற்றர் தூர பாதைகள் புனரமைக்கப்படவுள்ளன. வடக்கில் வவுனியா – ஹொரவபொத்தானை (10 கி.மீ), மதவாச்சி வீதி (12.6 கி.மீ) மற்றும் கெபதிகொல்லாவ - பதவியா வீதி (31கி.மீ) அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சியிருக்கும் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வீதிகளை புனர் நிர்மாணம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது.
மொறட்டுவை – பிலியந்தலை (2.5கி.மீ), இரத்மலானை – மீரிஹான (2.1கி.மீ), தெற்கு அதிவேக நெடுஞ்சாலை – மத்துகம (12.4கி.மீ), கிருலப்பன – ஹோமாகம (2.1கி.மீ) மற்றும் கெஸ்பாவ – பொகுனுவில (14.4 கி.மீ) ஆகியன புனர் நிர்மாணம் செய்யப்படவுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !