விலாடிமிர் புடின் ரஷ்ய அதிபரானதற்குப் பிறகு அமெரிக்காவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது அந்த நாடு என்று குற்றம் சாட்டியுள்ளார் அதிபர் ஒபாமா.
ஸ்னோடெனுக்கு ரஷ்யா அடைக்கலம் தர முடிவு செய்தததால் அமெரிக்கா கோபமாக உள்ளது. இந்தக் கோபம் காரணமாக புடினை சந்திக்கும் முடிவையும் ஒபாமா கைவிட்டுள்ளார். இந்த நிலையில் புடின் மீது மீண்டும் பாய்ந்துள்ளார் ஒபாமா.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்பை விட தற்போது தீவிர அமெரிக்க எதிர்ப்பு நிலையை ரஷ்யா எடுத்துள்ளது. பழைய பனிப்போரை நினைவூட்டும் வகையில் அது நடக்க ஆரம்பித்துள்ளது. புடின் அதிபராக மீண்டும் வந்த பிறகுதான் இந்த நிலை. டிமிட்ரி மெத்வதேவ் அதிபராக இருந்தபோது உறவுகள் ஓரளவு பரவாயில்லை என்ற நிலையில்இருந்தன. ஆனால் புடின் மீண்டும் வந்த பிறகு நிலைமை மாறி விட்டது.
முன்பை விட அதிகமான எதிர்ப்பு நிலையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !