பிரான்சில் முட்டைகளை தெருவில் போட்டு உடைத்து செயற்கையாக முட்டைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கும் நவீன யுக்தியில் இறகியுள்ளனர் அந்நாட்டு வியாபாரிகள்.
பிரான்ஸ் நாட்டு பிரிட்டனி பகுதியில் கோழிப்பண்ணக்ள் அதிகம். அதனால் அங்கு அளவுக்கு அதிகமான முட்டை உற்பத்தி செய்யப் படுகிறது. அதிகளவு முட்டைகள் கிடைப்பதால் அங்கு முட்டை விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
பராமரிப்புக்கு ஆகும் செலவைக்கூட இவர்களால் முட்டை வியாபாரத்தின் மூலம் பெற இயலுவதில்லையாம். இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கோழிப் பண்ணைகளில், முட்டையிடும் கோழிகளை இடவசதி மிகுந்த தரம் உயர்ந்த கூண்டுகளில் வைத்துப் பராமரித்தல் வேண்டும் என ஐரோப்பிய யூனியன் புது உத்தரவு பிறப்பித்தது. லாபமின்றி இத்தொழில் செய்ய இயலாது என எண்ணிய அவ்வியாபாரிகள், பிரிட்டனி பகுதியில் முட்டை உற்பத்தியை 5சதவீதம் குறைக்கச் சொல்லி போராட்டத்தில் இறங்கினர்.
அதன் ஒரு கட்டமாக கார்ஹெயிக்ஸ் புலோகர் என்ற இடத்தில் உள்ள அரசு வரி அலுவலகத்தின் முன் திரண்ட விவசாயிகள் சுமார் 1 லட்சம் முட்டைகளை கீழே போட்டு உடைத்தனர். இதன் மூலம், பிரிட்டனியில் நடைபெறும் 5 சதவிகித முட்டை உற்பத்தியை சமன் செய்யலாம் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடரும் இத்தகைய முட்டை அழிப்பு போராட்டங்களின் முலம் முட்டைகளின் தேவையை அதிகரித்து விலையை கூட்ட முயற்சி செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !