
மாத்தளை அலுவிகாரை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தேசியப் பத்திரிகைள் சிலவற்றில் போலிப் பெயரில் திருமண விளம்பர சேவை மூலம் பெண்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
இவ்வாறு பெண்களுடன் தொடர்பு கொண்ட நபர் சுமார் பத்து பெண்களுடன் உல்லாசமாக பாலியல் இன்பங்களை அனுபவித்துள்ளதோடு 20 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளார்.
குறிப்பாக கணவரை இழந்த பெண்களையே தொடர்பு கொண்டு இவ்வாறு ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பொலிஸார் தேடப்பட்டு வந்தநிலையிலேயே இன்று பெலியத்தை பகுதியில் வைத்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !