வடக்கிற்கான ரயில்தடம் அமைக்கும் பணிகளில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது.
கிளிநொச்சி,
அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே
மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவிலிருந்து
கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர்வரை வந்தடைந்தது.
இது
இவ்வாறிருக்க, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு
உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள
அதிகாரி ஒருவர் தெரிவித்ததுடன் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில்
ஏற்கெனவே இரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக இரயில் நிலையங்கள்
நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இதன் பணிகள் மற்றும் ரயில் பாதையை
நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடை பெற்று வருகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !