Headlines News :
Home » » 30 லட்ச ரூபா பணத்துடன் குவைத் பயணிக்க இருந்தவர் விமான நிலையத்தில் கைது!

30 லட்ச ரூபா பணத்துடன் குவைத் பயணிக்க இருந்தவர் விமான நிலையத்தில் கைது!

Written By TamilDiscovery on Friday, July 12, 2013 | 5:05 AM

30 லட்சம் இலங்கை ரூபா பணத்துடன் குவைத் செல்ல முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை பயணப் பையில் மறைத்துக் கொண்டு சென்ற 28 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபருக்கு 50,000 ரூபா அபராதம் விதித்ததாகவும் அவர் அதனை செலுத்தத் தவறியதால் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template