தனது காதலியின் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹுனுப்பிட்டிய, கங்காராம பகுதியில் வைத்தே குறித்த இராணுவ வீரர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கியுள்ளார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 25 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக செலுத்துமாறு நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கோட்டை பிரதான நீதவான் திலின கமகேயே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் சம்பவத்தை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவருவதாக தெரிவித்ததையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
நஷ்டஈட்டை பகுதி பகுதியாக வழங்குமாறு நீதவான் இராணுவ வீரருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கங்காராமவிற்கு அருகில் விசேட கடமையில் ஈடுபட்டிருந்த போது அதற்கு அண்மையில் மூன்று ஜோடி காதலர்கள் மிக மோசமானமுறையில் நடந்துக்கொண்டதாகவும் அதனை கண்ட கான்ஸ்டபிள் அந்த ஜோடியினரை எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போதே இராணுவ வீரர் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் பொலிஸ் கான்ஸ்டபிளை தான் இராணுவ வீரர் என்று எச்சரித்ததுடன் அவரை தாக்கியதாக கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !