
முதல் காட்சி இன்று காலை சென்னை மாயாஜால், சத்யம் எஸ்கேப் உள்ளிட்ட அரங்குகளில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடங்கியது.
முதல் காட்சி என்பதால் விஜய் ரசிகர்கள் திரண்டு வந்து திரையரங்குகளில் குவிந்துள்ளனர். முன்பதிவுக்கு கூட்டமில்லை ஞாயிற்றுக்கிழமையே டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும், முன்பதிவு எதிர்ப்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. முதல் நாள் காட்சிக்கு அனைத்து அரங்குகளும் கிட்டத்தட்ட ஹவுஸ் புல்.
சத்யம் சினிமாஸின் அனைத்து அரங்குகளிலும் தலைவா முதல் காட்சி ஹவுஸ் புல்லாகிவிட்டது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு முன்வரிசை டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. மாயாஜாலில் 44 ஷோ மாயாஜாலில் இந்தப் படத்தை டால்பி அட்மோஸில் 5 காட்சிகளும், சாதாரணமாக 44 காட்சிகளும் திரையிட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 38 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. மாயாஜாலில் 49 காட்சிகளும், சத்யம் வளாகங்களில் 24 காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளது தலைவா.
புறநகர்கள், வெளியூர்களிலும் தலைவாவுக்கு இன்று நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. திரையரங்குகாரர்களுக்கு சந்தோஷம்தான் எப்படியும் வெள்ளி, சனி, ஞாயிறு அரங்குகள் நிறைந்துவிடும் என்பதால் மகிழ்ச்சியோடு உள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். காரணம், அவர்கள் போட்ட பணத்தை எடுக்க இந்த 5 நாட்கள் போதும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்!
திருட்டு டிவிடியால் பாதிப்பு:
காரணம் இந்தப் படத்தை நிறையப் பேர் திருட்டு டிவிடியில் பார்த்துவிட்டது. இன்னொன்று படம் எப்படி இருக்கிறது என்ற தகவல்கள் விமர்சனங்கள் மூலம் ஏற்கெனவே தெரிந்துவிட்டதுதான்.
எப்படியும் கூட்டம் வரும்:
பொதுவாக வெள்ளிக்கிழமைதான் படங்கள் வெளியாகும். அதற்கு அடுத்தடுத்த இரு தினங்கள் விடுமுறை என்பதால் படங்கள் எப்படி இருந்தாலும் கூட்டம் வந்துவிடும்.
பரவாயில்லை:
ஆனால் தலைவா படமோ வார நாளான செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது. இருந்தாலும் பெருமளவு அரங்குகளில் இன்று கிட்டத்தட்ட ஹவுஸ்புல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !