மலையாள நட்சத்திர தம்பதி திலீப்பும் மஞ்சு வாரியரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இருவரும் 14 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு மஞ்சுவாரியார் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
இவர்களுக்கு
மீனாட்சி என்ற மகள் உள்ளார். திலீப்பும் மஞ்சுவாரியரும் தற்போது பிரிந்து
தனித்தனியாக வாழ்கிறார்கள். விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து
இருப்பதாகவும் இதற்காக வக்கீல்களுடன் இருவரும் ஆலோசித்து வருவதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. பிரிவுக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியாமல்
இருந்தது. இப்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மஞ்சுவாரியருக்கு
மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை.
ஆனாலும் சமீபத்தில் கர்ப்பம் தரித்தார். குழந்தையை பெற்றெடுக்கும்படி திலீப் வற்புறுத்தி வந்தார். மஞ்சு வாரியரோ கணவனுக்கு தெரியாமல் வைத்தியசாலைக்கு சென்று கருக்கலைப்பு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
மஞ்சு
வாரியருக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்தது. திலீப் நடிக்க வேண்டாம் என்றார்.
அவர் நிர்ப்பந்தத்தை மீறி கதை கேட்க ஆரம்பித்தார். அத்துடன் பொது
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று நடனம் ஆடவும் செய்தார்.
மஞ்சுவாரியார்
மீண்டும் நடிப்பதற்கு அவரது பெற்றோர் ஆதரவாக உள்ளனர். இதுவே இருவருக்கும்
இடைவெளியை ஏற்படுத்தி விவாகரத்துக்கு இழுத்து வந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !