இந்தியாவின், கேரள தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகியோர் சூரிய ஒளி மின்சார கருவி பொருத்தி தருவதாக பலரிடம் இலட்சக்கணக்கில் மோசடி செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உதவியாளர், பாதுகாவலர் உள்பட நான்கு அரச ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் இதற்கு பொறுப்பேற்ற உம்மன் சாண்டி இராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதனால் உம்மன் சாண்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சோலார் பேனல் விவகாரத்தில் உம்மன் சாண்டியை சம்பந்தப்படுத்தி பேஸ்புக் இணையத்தளத்தில் கேரள அரசு தலைமை செயலகத்தில் உள்ளாட்சி துறையில் பணிபுரியும் ஊழியர் பிரேமானந்த் என்பவர் கிண்டல் அடித்து இருந்தார்.
இதுபற்றி கேரள அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அது உண்மை என்று தெரியவந்தது.
இதை தொடர்ந்து பிரேமானந்த் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள அரசு தலைமை செயலாளர் பரத்பூஷண் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !