Headlines News :
Home » » மறைந்துபோன மகேந்திரபர்வத நகரம் கம்போடியக் காடுகளிடையே கண்டுபிடிப்பு?

மறைந்துபோன மகேந்திரபர்வத நகரம் கம்போடியக் காடுகளிடையே கண்டுபிடிப்பு?

Written By TamilDiscovery on Sunday, June 16, 2013 | 1:18 AM

1,200 ஆண்டுகளுக்கு முன்னால் பெருமையுடன் திகழ்ந்த நகரம் ஒன்று, அடர்ந்த கம்போடியக் காடுகளிடையே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள தொல்பொருள் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தனது குழுவினருடன் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்கு அவர்கள் லிடார் லைட் டிடக்சன் என்ற லேசர் தொழில்நுட்பத்தையும், தரவு (டேட்டா) வரைபடத்தையும் உபயோகித்தனர். கம்போடியாவின் உட்பகுதியில் அடர்த்திமிக்க பனாம் குலன் என்ற பனி மூடிய மலைப்பகுதியை வட்டமிட்டபோது, லேசர் கதிர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் 20க்கும் மேற்பட்ட கோவில்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை அனைத்தும் அங்கோர் பேரரசு அமைந்தபோது, 802 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டவையாக இருக்கும் என எண்ணப்படுகின்றன. இதுவே மறைந்துபோன மகேந்திரபர்வத நகரமாக இருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இங்குள்ள அடர்ந்த, கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ள காட்டுப்பகுதியான சியம் ரீப் பகுதியில் புகழ் பெற்ற அங்கோர் வாட் கோவில் உள்ளது. இந்தக் கோவில் அமைவதற்கு 350 வருடங்களுக்கு முன்னரே மாபெரும் போர் வீரரான இரண்டாம் ஜெயவர்மன இந்த மலை நகரத்தைத் தலைநகரமாக நிர்மாணித்ததாகக் கூறப்படுகின்றது.

நிலப்பரப்பின் வழியே கண்டுபிடிக்க மிகவும் கடினமாக இருந்த ஒரு திட்டத்தை லேசர் கதிர்கள் உதவி கொண்டு சாதிக்க முடிந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. மேலும், இந்த கண்டுபிடிப்பானது அமெரிக்காவின் தேசீய விஞ்ஞானக் கழகத்தின் பதிப்புகளில் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

(Mahendraparvata, 1,200-Year-Old Lost Medieval City In Cambodia, Unearthed By Archaeologists.)
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template