இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் உடலில் இந்திய மரபணுக்கள் இருப்பதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் உடலில் இந்திய மரபணு இருப்பதாகவும், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் இங்கிலாந்தில் உள்ள மரபணுச் சோதனை நடத்தும் நிறுவனம் ஒரு ஆச்சர்ய தகவலை வெளியிட்டது.
வில்லியமின் தாயாரான மறைந்த இளவரசி டயானா வழியில் ஐந்தாவது தலைமுறைக்கு முந்தைய கொள்ளுத் தாத்தாவின் பெயர் தியோடர் பார்ப்ஸ். பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்த போது, தியோடர் பார்ப்ஸ் குஜராத்தின் சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றினார். இவரிடம் எலிஷா ஹேவார்க் என்ற பெண் பணியாற்றினார். இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். பார்ப்ஸ்க்கும், எலிஷாவுக்கும் காதல் மலர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து எலிஷாவை விட்டு விட்டு பார்ப்ஸ் மட்டும் பிரிட்டன் சென்றதாக தெரிகிறது.
இந்த பார்ப்ஸ் - எலிஷாவின் வம்சாவளியில் வந்தவர் தான் மறைந்த இளவரசி டயானா.
எலிஷாவிடமிருந்து “மிட்சோன்ட்ரியல்” என்ற மரபணு அவரது பெண் குழந்தைகளுக்கு சென்றுள்ளது. இந்த மரபணு தன் தாய் வழி பாட்டிகளிடமிருந்து டயானாவுக்கும், அவர் மூலமாக அவரின் பிள்ளைகளான இளவரசர் வில்லியமுக்கும், அவரது சகோதரர் ஹாரிக்கும் வந்துள்ளது.
இதனால் இளவரசர் வில்லியம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள இந்த தகவல் குறித்து லண்டன் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே இளவரசர் வில்லியம்சின் மூதாதையர் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியானதை அடுத்து, அங்கு வில்லியம்சின் வம்சாவளியை சேர்ந்த யாராவது உள்ளனரா என்பதை அறிந்து கொள்வதில் சூரத் மக்கள் ஆர்வமாக உள்ளனர். சிலர் இதற்கான தகவல் சேகரிப்பிலும் இறங்கியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !