திருவள்ளூர் பெரியகுப்பம் மூக்காத்தம்மன் கோவில் தெருவில், தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் 55 வயதான மேகவண்ணன், தனது 46 வயதான மனைவி ராணியுடனும் மகளுடனும் வாழ்ந்து வந்தார்.
இவர்களது மகள் அரக்கோணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். கணவன், மனைவி மட்டுமே வீட்டில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மேகவண்ணன் இரவு வேலை முடித்து நேற்று காலை வீட்டிற்கு வந்த போது கதவு உள்தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் கதவை பலமுறை தட்டியும் அவரது மனைவி ராணி கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த, மேகவண்ணன், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ராணி மின்விசிறியின் கீழ் உட்கார்ந்த நிலையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் போல் இருந்தார்.
இதைக் கண்ட மேகவண்ணன் உடனே திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சென்று ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உட்கார்ந்த நிலையில் ராணி தூக்கில் தொங்கியிருப்பதால் அவரை யாராவது கொலை செய்து தூக்கிலிடப்பட்டிருக்கலாமா..? இல்லை ராணி தற்கொலை செய்து கொண்டாரா..? என்ற பல கோணங்களில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !