இது குறித்து மேலும் தெரியவருவது:-
சவுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஆண் தொடர்பில் தேடிப்பார்த்துள்ளார்.இதன்படி அப்பெண் குறித்த நபரது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளை இருவாரங்களுக்கு தேடியுள்ளார். இதன்போது அந்நபரின் பேஸ்புக் கணக்கில் எத்தனை நண்பிகள் உள்ளனர், அவரின் பேஸ்புக் படங்கள், கொமண்ட்கள், இன்ஸ்ரகிராம் கணக்கு, டுவிட்டர் கணக்கில் போடப்பட்ட டுவிட்கள் ஆகியவற்றையும் அப்பெண் ஆராய்ந்துள்ளார்.
இதன்விளைவாக அந்நபருக்கு அதிகமான பெண் தோழிகள் இருப்பதை அப்பெண் கண்டறிந்துள்ளார். இதனையடுத்து அப்பெண் உனடியாக அந்நபரை திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவை எடுத்தமௌக்காக பலர் அப்பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !