தான் விரும்பியதைச் செய்ய சினிமா இமேஜ், இரசிகர்கள் வளையம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர் அஜித்.
விரும்பினால் வெளிநாட்டில் ரேசுக்குப் போவார், அல்லது உள்ளூரில் ரேஸ் போவார், க்யூவில் நின்று வாக்களிப்பார், அச்சரப்பாக்கம் பக்கம் போய் குட்டி விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்களைப் பறக்க விட்டுக் கொண்டிருப்பார்.
´நடிப்பு என் தொழில், தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் அந்தத் தொழிலால் பாதிக்கக் கூடாது´ - இது அஜித் அடிக்கடி சொல்லும் விஷயம். சமீபத்தில்தான் புதிதாக பிஎம்டபிள்யூ1000 ஆர்ஆர் என்ற புதிய பைக்கை ஏக விலை கொடுத்து வாங்கினார் அஜித். தனது சொந்த உபயோகத்துக்கு அவர் வாங்கிய இந்த பைக்கை விஷ்ணுவர்தன் இயக்கும் ஆரம்பம் படத்திலும் பயன்படுத்தியுள்ளார். இந்த பைக்கில் நேற்று சென்னையை ஒரு வலம் வந்தார் அஜித். முழு ரேஸ் சூட்டில் அந்த பைக்கை தனது அச்சரப்பாக்கம் மினி ஹெலிபேட் வரை ஓட்டிச் சென்றார். உடன் அவரது நண்பரும் சென்றார்.
ரேஸ் சூட்டில் இருந்ததற்காக எங்கும் இறங்காமல் செல்லவில்லை அவர். வழியில் கும்பகோணம் டிகிரி காபி என்ற கடையில் நிறுத்தி காபி குடித்தார். அவரை திடீரென்று பார்த்ததில் இளைஞர்களும் பொதுமக்களும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர். தன்னைத் தேடி வந்து பேசிய அத்தனை பேரிடமும் ஜாலியாகப் பேசி விடைப் பெற்றுச் சென்றார் அஜீத்.
ஆரம்பத்துக்கு அட்டகாசமான டீசர் மாதிரி அமைந்தது அஜித்தின் இந்த அதிரடி பைக் ட்ரிப்.
அஜீத் வாங்கியுள்ள புதிய பிஎம்டபுள்யூ:
ரேஸ் பிரியரான நடிகர் அஜீத்குமார் ஏராளமான சூப்பர் பைக்குகளை வைத்துள்ளார். இந்த நிலையில், புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் சூப்பர் பைக் ஒன்றை சமீபத்தில் வாங்கியிருக்கிறார். திருவான்மியூரில் உள்ள அஜீத்குமாரின் வீட்டுக்கு சமீபத்தில் டெம்போ வேன் மூலம் அந்த பைக் கொண்டு வரப்பட்டு டெலிவிரி கொடுக்கப்பட்டது.சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் காலில் காயம் ஏற்பட்டு ஓய்வெடுத்து வரும் அஜீத் மற்றுமொரு புதிய சூப்பர் பைக்கை வாங்கியிருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஜீத் ஓட்டப்போகும் பைக்கின் விசேஷங்களை ஸ்லைடரில் காணலாம்.
பைக் பிரியர்:
ரேஸ் பிரியரான அஜீத் தனது படங்களில் சூப்பர் பைக்குகளை ஓட்டி வரும் காட்சிகளில் நடித்து வருகிறார். விரைவில் வெளிவர இருக்கும் படத்தில் டுகாட்டி பைக்கை அவர் ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
டெலிவிரி:
டெம்போ வேன் மூலம் நடிகர் அஜீத் குமார் வீட்டில் பைக் டெலிவிரி கொடுக்கப்பட்டது.
எஞ்சின்:
இந்த சூப்பர் பைக்கில் 172.2 பிஎச்பி சக்தியையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
உந்துசக்தி:
பிற பைக்குகளை காட்டிலும் அபார உந்துசக்தி கொண்டது. 0-100 கிமீ வெறும் 3.1 வினாடிகளில் எட்டும்.
டாப் ஸ்பீடு:
மணிக்கு அதிகபட்சமாக 305 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது இந்த பைக்.
பிரேக் திறன்:
250 கிமீ வேகத்தில் பிரேக் பிடித்தால் 229 மீட்டர் தூரத்திற்குள் பைக்கை நிறுத்த முடியும்.
டிஸ்க் பிரேக்:
ஏபிஎஸ் இணைந்து செயல்படும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டிராக்ஷன் கன்ட்ரோல் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும் உண்டு.
மைலேஜ்:
இந்த பைக் நடைமுறையில் லிட்டருக்கு 15 கிமீ முதல் 20 கிமீ வரை மைலேஜ் தருமாம்.
எடை:
இந்த பைக் 207.7 கிலோ எடை கொண்டது.
டிரைவிங் வசதி:
ரெயின், ஸ்போர்ட், ரேஸ் மற்றும் ஸ்லிக் ஆகிய 4 டிரைவிங் மோடுகளை கொண்டது. பைக் வாங்கியவுடன் பாதுகாப்பு கருதி முதலில் ரெயின் என்ற மழை நேரத்தில் ஓட்டுவதற்கான மோடில் வைத்து செட்டிங் செய்து கொடுக்கின்றனர். இதன்படி, பைக் மணிக்கு 150 கிமீ வேகத்தை தாண்டாது. பைக்கின் செயல்பாடுகள் வாடிக்கையாளருக்கு ஓரளவு பிடிபட்டவுடன் முதல் சர்வீஸின் போது பிற மோடுகளில் டிரைவிங் செய்யும் வசதியை பிஎம்டபிள்யூ டீலரில் செய்து கொடுக்கின்றனர்.
விலை:
ரூ.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.28 லட்சத்தை நெருங்குகிறது.
அஜீத் வாங்கியுள்ள புதிய பிஎம்டபுள்யூ (BMW) ரேசிங் பைக்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !