விஜய்யின் தலைவா படம் சென்னையில் ரூ. 7 கோடிக்கும் மேலாக வசூலித்து விட்டதாக ஒரு இணையதளத்தில் செய்தி போட்டுள்ளனர்.
ஆனால் தற்போது தலைவா படம் ரொம்ப பின்னுக்குப் போய் விட்டதாகவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் வசூலில் பின்னி எடுப்பதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏகப்பட்ட பொல்லாப்புகள், பிரச்சினைகளுக்குப் பின்னர் ஆகஸ்ட் 20ம் தேதி திரைக்கு வந்த தலைவா, தற்போது சில தியேட்டர்களில் மட்டுமே ஓடி வருகிறது.
முதல் நாளில் நல்ல கூட்டம்:
தமிழகத்தில் மட்டும் ரொம்ப லேட்டாக திரைக்கு வந்தது தலைவா. முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இதனால் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருந்ததாம்.
முதல் 2 வாரத்தில் ஓ.கே.:
முதல் 2 வாரங்களுக்குக் கூட வசூல் ஓ.கேதானாம். வேறு புதிய படம் எதுவும் வராத காரணத்தால் தலைவா, தனியாக ஓடிக் கொண்டிருந்தது.
சென்னையில் 2 வாரத்தில் ரூ. 6 கோடி வசூல்:
இதன் காரணமாக சென்னையில் மட்டும் இப்படம் முதல் 2 வாரங்களில் ரூ. 6 கோடியை வசூலித்ததாம்.
வருத்தப்பட வைத்த வாலிபர் சங்கம்:
ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரிலீஸானதைத் தொடர்ந்து தலைவா படம் ரொம்ப பின்னால் போய் விட்டதாம்.
இதுவரைக்கும் 7 கோடிக்கும் மேல்:
இதுவரைக்கும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம் தலைவா. ஆனால் இந்த வசூல் இன்னும் வேகமாக குறைந்து வருகிறதாம் இப்போது.
சிவகார்த்திகேயன் டாப்:
இன்றைய நிலவரப்படி சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் வசூலில் முதலிடத்தில் இருக்கிறதாம். அடுத்த இடத்தில் சுத் தேசி ரொமான்ஸ் இந்திப் படமும், 4வது இடத்தில் தங்கமீன்கள் படமும் இருக்கிறதாம்.
தங்கமீன்களுக்கு அடுத்து தலைவா:
தங்கமீன்கள் படத்திற்குஅடுத்த இடத்தில் தற்போது தலைவா உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஓ.கே.:
ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் தலைவாவுக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாம். இங்கிலாந்திலும் நல்ல வசூலாம்.
தலைவா வசூல்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !