ஐக்கிய நாடுகள் ஆய்வில் 156 நாடுகளில் இலங்கை 137வது இடத்தில் உள்ளதாகவும் இலங்கையில் ராஜபக்ஷ தலைமை மாத்திரம் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது அபாயகரமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தேசிய சேமிப்பு வங்கி 9.25% வட்டியில் கடன் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் அது நம்ப முடியாத ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிகூடிய 8.25% வட்டிக்கே கடன் பெற்றுள்ளதாகவும் அது யுத்தம் இடம்பெற்ற 2007ம் ஆண்டே பெறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக வட்டியில் கடன் வாங்கினால் அதன் சுமைகள் இந்நாட்டு மக்கள் மீதே சுமத்தப்படும் என ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நிலை வலுவாக இருந்தால் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடைவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !