தமிழகத்திலேயே மிக உயரமான விநாயகர் சிலை 8ம் திகதி பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
திண்டுக்கல், கோபாலசமுத்திரம் கண்மாய் கரையில் 108 விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 32 அடி உயர விநாயகர் சிலை எதிர்வரும் 8ம் திகதி பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
இது தமிழகத்திலேயே மிக உயரமான விநாயகர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலை செய்யும் பணி திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்ப கூடத்தில் கடந்த ஓராண்டாக நடந்தது.
இந்த சிலைக்காக ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையத்தில் 130 டன் எடையுள்ள ஒரே கல் வெட்டி எடுக்கப்பட்டது. இந்த கல் 24 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது.
கிரேன் மூலம் சிலை லொரியில் ஏற்றப்பட்டு திண்டுக்கல்லுக்கு நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டது. 108 கோயில் நிர்வாகி மருதநாயகம் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பின்னர் தானிய வாசம், நாணய வாசம், மலர்வாசம், சொர்ணம்வாசம் ஆகிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயிலில் தயார் நிலையில் உள்ள பீடத்தில் 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவபடவுள்ளது. இச்சிலை முறைப்படி 8ம் திகதி பிரதிஷ்டை செய்யப்படும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !