நம்ம ஊர் நடிகைகளெல்லாம் உடம்பில் சதை போட்டு விட்டால் உடனே ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வது, இரும்பு கம்பிகளை தூக்கி மல்லுக்கட்டுவது என்றெல்லாம் உடல் எடையை குறைக்க மன்றாடுவார்கள்.
ஆனால், ஹாலிவுட் நடிகையான மதராசப்பட்டினம் எமி ஜாக்சன், மழைக்குகூட ஜிம் பக்கம் ஒதுங்கினதில்லையாம்.
பிறகெப்படி உடம்பு இப்படி செதுக்கி எடுத்த சிற்பம் போலிருக்கிறது? என்று கேட்டால், அதற்கு காரணம், ஜிம் பயிற்சி இல்லை. என்னுடைய உணவுக்கட்டுப்பாடுதான். தினமும் காலை எழுந்ததும் அரை லிட்டர் தண்ணி குடித்தபடி நாளை தொடங்கும் நான், பின்னர் ஜூஸ் மட்டுமே குடித்து விட்டு, எனது பேவரிட் விளையாட்டுகளான ஹாக்கி, கால்பந்து என்று எதையாவது சில மணி நேரங்கள் விளையாடுவேன்.
அதன்பிறகு நீச்சல் குளத்துக்கு சென்று ஹாயாக நீந்திக்குளிப்பேன். அதில் எனது உடம்பில் ஏற்பட்ட அசதி மட்டுமின்றி, அனைத்து உறுப்புகளும் வேலை செய்யும்.
இப்படி குறைந்தது ஒரு மணி நேரமாவது நான் தினமும் நீந்திக்குளிப்பதை கடைபிடித்து வருகிறேன் என்று சொல்லும் எமி எனது உடம்பு மீன் மாதிரி வழவழப்பாக, ஸ்லிம்மாக இருக்கிறதென்றால் இதுதான் காரணம் என்கிறார்.
மேலும் மதியம், இரவு நேரங்களில் உடம்பில் சதை போடாத மீன் மற்றும் அசைவ உணவுகளையும் எடுத்துக்கொள்வதாக சொல்லும் எமி, இரவில் படுக்கைக்கு தூங்கச்செல்லும்போது பால் தவிர வேறு எந்த திரவ அயிட்டங்களையும் எடுத்துக்கொள்வதில்லையாம்.
அவர் உடம்பு அழகாக, ஆரோக்யமாக இருப்பதற்கு இதுதான் காரணமாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !