100 ஆண்டுகளில் ஐரோப்பிய ஆண்கள் 11 செ.மீட்டர் கூடுதலாக வளருவார்கள் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள தேசிய பல்கலைக் கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பள்ளி மற்றும் எஸ்செல் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரதுறை பேராசிரியருமான திமோதி ஜெ.ஹாட்டன் தலைமையிலான குழுவினர் ஒரு நூதன ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் படி 15 ஐரோப்பிய நாடுகளில் கடந்த 1870–1980 ஆண்டுகளுக்கு இடையே வாழ்ந்த 21 வயதினரின் உயரம் பற்றி கணக்கெடுப்பு நடத்தினர்.
அப்போதைய கால கட்டங்களில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து இருந்தது.
அவர்களில் பெண்களை விட ஆண்களின் உயரம் அதிகரித்த வண்ணம் இருந்ததும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 100 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ஆண்கள் கூடுதலாக 11 செ.மீட்டர் உயரம் வளரக்கூடிய நிலை உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு முக்கிய காரணமாக அவர்களின் பொருளாதார வளர்ச்சி விளங்குகிறது. அதன் மூலம் அவர்கள் சுகாதாரமான இருப்பிடம், உணவு, வசியான வாழ்க்கை, மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைக்கிறது.
இதன் மூலமே அவர்களின் உயரம் வளரும் வாய்ப்பு உருவாகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !