சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் பியுஹே ஆற்றில் இரசாயன தொழிற்சாலையின் அம்மோனிய கழிவுகள் கலந்ததையடுத்து அந்த ஆற்றில் இருந்த மீன்கள் எல்லாம் செத்து மிதந்தன.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செத்து மிதந்த 100 டன் மீன்களை வெளியே எடுத்து சேகரித்தனர்.
கொட்டப்பட்டிருந்த அந்த இறந்த மீன்கள் பனித்திட்டுகள் போன்று காட்சியளித்தன. இதனால் அப்பகுதி மீனவர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த வருடம் தொடக்கத்தில் ஷாங்காய் மாகாண ஆற்றில் இதுபோன்று 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியூட்டியது. இதற்கு அந்த ஆற்றின் கரையில் இருந்த பன்றி பண்ணை மீது குற்றம் சாட்டப்பட்டது.
இப்போது 100 டன் மீன்கள் இறந்துபோனதற்கு ஹூபெய் மாகாண ஒரு இரசாயன தொழிற்சாலை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும் சீனா இதுபோன்ற சுற்றுச்சூழல் மாசு அடையும் பிரச்சினையை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !