
இதனால் ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பாடல்களையும் ட்ரைலரையும் ரசித்தனர் அஜித் ரசிகர்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் முதலில் ஐட்யூன்ஸில் மட்டுமே வெளியாகின. இதனால் பணம் செலுத்தி பாடல்களை பதிவிறக்கம் செய்வதில் மும்முரம் காட்டினர் அஜித் ரசிகர்கள். நேற்று மாலைதான் கடைகளுக்கு சிடி வந்தது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் பா விஜய் எழுதியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் துள்ளல் இசையில் அமைந்துள்ளன.
அடடா ஆரம்பம் பாடல் எடுத்த எடுப்பிலேயே ஹிட்டாகிவிட்டது. மற்றொரு பாடல் ஸ்டைலிஷ் தமிழச்சியும் ஹிட்தான். மற்ற பாடல்களும் படம் வெளியாவதற்குள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகிவிடும் என இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு படத்தின் ட்ரைலரை இணையத்தில் வெளியிட்டனர். வெளியான சிலமணி நேரங்களில் 3 லட்சம் விசிட்களை நெருங்கிவிட்டது இந்த ட்ரைலர். ஆரம்பம் படம் குறித்து ஆரம்பத்தில் எந்த செய்தியுமே தெரியாமல் திண்டாடினர் அஜித் ரசிகர்கள். படத்தின் தலைப்பே ஒரு ஆண்டு கழித்துதான் வெளியானது.
ஆனால் நேற்று ஒரே நாளில் பாடல்களும் ட்ரைலரும் அடுத்தடுத்து வெளியானதில் இரட்டிப்பு சந்தோஷத்துக்குள்ளாகிவிட்டனர் அஜித் ரசிகர்கள்.
மேலும் ஆரம்பம் படத்துக்கு தனிக்கைக்குழு யு-ஏ சான்று வழங்கியுள்ளது.
பொதுவாக படம் வெளியாகும் திகதிக்கு சில தினங்கள் இருக்கும்போதுதான் தணிக்கைக்கு அனுப்புவார்கள். ஆனால் இந்த முறை தீபாவளிக்கு வெளியாகும் படங்கள், ஓரிரு வாரங்களுக்கு முன்பே தணிக்கை சான்றிதழைத் தந்தாக வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆரம்பம் படம் நேற்று தணிக்கை செய்யப்பட்டது. படத்துக்கு யு-ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இது படத்தின் தொலைக்காட்சி உரிமை பெற்றவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சிக்காக அவர்கள் மீண்டும் மறுதணிக்கை செய்து யு சான்றிதழ் பெற வேண்டியிருக்கும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !