பேஸ்புக்கில் லைக் கொடுப்பது பேச்சு சுதந்திரமாகும். அதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
லைக் கொடுப்பது என்பது 21ம் நூற்றாண்டில் ஒரு பிரசாரத்திற்கு இணையான அளவுகோலாக கருதப்பட வேண்டும் என்றும் விர்ஜீனியா மாகாண நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய ஷெரீப்கள் சங்கத் தலைவர் பதவிக்கு ஹாம்ப்டன் நகர ஷெரீப் பி.ஜே.ராபர்ட்ஸ் என்பவர் போட்டியிட்டார். அவரது அலுவலக ஊழியர்கள், ராபர்ட்ஸுக்கு எதிராக போட்டியிட்டவருக்கு ஆதரவு கொடுத்தனர்.
அவரது பேஸ்புக்கிலும் லைக் போட்டனர். இதையடுத்து 6 பேரை வேலையை விட்டு தூக்கி விட்டார் ராபர்ட்ஸ்.
இதனால் கோபமடைந்த 6 பேரும் வழக்குப் போட்டனர். அதை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் செய்தது தவறு என்று கூறியது. இதை எதிர்த்தே ஆறு பேரும் மேன்முறையீடு செய்தனர்.
அதில்தான் லைக் போடுவது அடிப்படை பேச்சு சுதந்திரம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தான் வேண்டும் என்றே அவர்களை பணிநீக்கம் செய்யவில்லை என்றும் சரியாக வேலை பார்க்காததாலும் திறமைக் குறைபாடு காரணமாகவுமே இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறியுள்ளார் ராபர்ட்ஸ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !