15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, ஆன்மிக தலைவர் ஆஸ்ரம் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜன்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆஸ்ரம் பாபு நடத்தி வரும் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
அவருக்கு ஆஸ்ரம் பாபு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த சிறுமி மத்திய டெல்லியில் உள்ள கமலா மார்க்கெட் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில், ஜோத்பூரில் உள்ள ஆஸ்ரமத்தில் ஆஸ்ரம் பாபு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதையடுத்து இந்த மாதம் என் தந்தை என்னை டெல்லிக்கு அழைத்து வந்து, ஆஸ்ரம் பாபுவை சந்தித்து பேச முடிவுசெய்தார். ஆனால் ஆஸ்ரம் பாபு எங்களை சந்திக்காமல் சென்றுவிட்டார், என்று கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் புகார் கொடுத்தால் உண்மைகள் மறைக்கப்படும் என்பதால், டெல்லியில் புகார் அளித்ததாக, சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
டெல்லியில் புகார் பதிவு செய்யப்பட்டாலும், பின்னர் ஜோத்பூருக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஏராளமான பக்தர்களின் மரியாதைக்குரிய ஆஸ்ரம் பாபு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதற்கு முன்பு குஜராத் பொலிஸ் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
டெல்லியில் 2012ம் ஆண்டு மருத்துவ மாணவியை ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி கருத்து கூறிய ஆஸ்ரம் பாபு, "குற்றவாளிகளை சகோதரர்கள் என்று அழைத்து தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினால் கற்பழிப்பில் இருந்து தப்பித்திருக்கலாம்" என்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சிறுமி பலாத்கார வழக்கில் போலி சித்தர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !