நம்மை சுற்றி எந்நேரமும் அலைவரிசைகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். எங்கோ ஒலிபரப்பாகும் ரேடியோவை கேட்க முடிகிறது, அதேபோல எங்கோ ஒளிபரப்பாகும் TV ஐயும் எம்மால் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமா Wi-fi-யின் மூலம் மடிக்கணனியில் இணையத்தை பயன்படுத்தலாம்.
இவ்வாறு பல அலைவரிசைகள் எம்மைச் சுற்றி எப்பவுமே காணப்படுகிறது, காரணம் இதில் எலக்ட்ரான்கள் உள்ளது. இதனைப் பாவித்து பற்றரிகளை சார்ஜ் செய்யும் சிப் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனை கைபேசியில் புகுத்தினால், நாம் அவசரத்துக்கு சார்ஜ் செய்ய அலையவேண்டியது இல்லை.
பற்றரி வீக் ஆனால், ஒரு பட்டனை அழுத்தினால் போதும். சார்ஜருடன் இணைத்தது போல அது சார்ஜ் செய்ய ஆரம்பித்துவிடும். அதிக மின்சாரத்தை அது உற்பத்திசெய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவசரத்துக்கு உதவும் வகையில் அது மின்சாரத்தை தயாரித்து பற்றரியை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. அதிலும் நாம் நல்ல சிக்கனல் கிடைக்கும் இடங்களில் இருந்தால், அங்குள்ள Routers, TV சிக்னல்கள் மற்றும் ரேடியோ சிக்னல்களின் கதிர்களை அது பாவித்து மின்சாரத்தை உற்பத்திசெய்துவிடும்.
இதுபோன்ற சாதனங்கள் விரைவில் சந்தையில் வர உள்ளது, இது மிகவும் அதிசயமான கண்டுபிடிப்பு தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !