சென்னை சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கி கைதாகி உள்ள போலி சாமியாருடன் அரசியல்வாதிகள் தொடர்பில் இருப்பதாக பொலிசாருக்கு விசாரணையில் தெரியவந்துள்ளன.
வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த 14 வயது சிறுமி சுதா என்பவரை அதே பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வந்த அறவழி சித்தர் (48) என்பவர் போதை மருந்து கொடுத்தும், போதை ஊசி போட்டு பல முறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இதற்கு சுதாவின் தாயார் திருமலரும் உடந்தையாக இருந்துள்ளார்.
அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை பாலியல் கும்பலிடம் விற்பனை செய்துவிட்டார். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சுதா திருப்பதி சென்று அங்கு மாங்காய் வியாபாரம் செய்து வந்தார். சந்தேகம் அடைந்த ஆந்திர பொலிசார் சிறுமியை பிடித்து விசாரித்த போது, அவர் தனக்கு நடந்த சோகத்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமி தமிழக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தமிழக பொலிஸ் டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவின் பேரில் சிபிசிஐடி பொலிசார் அறவழி சித்தரையும், சிறுமியின் தாயார் திருமலரையும் கைது செய்தனர். மேலும் அறவழி சித்தரின் ஆசிரமத்தில் பொலிசார் சோதனையிட்டபோது ஆபாச சி.டி.க்கள் சிக்கி உள்ளது. பாலியல் கும்பலை சேர்ந்த குமார், செல்வம் மற்றும் மேலும் 2 பெண்களை பொலிசார் தேடி வருகின்றனர். சுதாவிடம் தவறாக நடந்து கொண்ட திருவான்மியூர் சதீஷ், வடசென்னை குமார், அப்பு, கணேஷ், பப்புலு ஆகிய 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சிறுமி சுதாவுடன் உல்லாசம் அனுபவிக்க பாலியல் புரோக்கர் செல்வத்துக்கு ரூ.10 ஆயிரம் வரை கொடுத்து உள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமி சுதா தற்போது குழந்தைகள் நல கமிட்டி பராமரிப்பில் காப்பகத்தில் உள்ளார். அவர் உடல் முழுவதும் போதை ஊசி போடப்பட்ட தழும்புகள் உள்ளது. போலி சித்தரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் 15 ஆண்டுகளாக இதுபோன்ற சித்து வேலைகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் போலி முகத்தை நம்பி பல அரசியல் தலைவர்கள் அரசியல் எதிர்காலம் குறித்து குறி கேட்டுள்ளனர். அவர்கள் யார்? அவர்கள் போலி சித்தருக்கு என்னென்ன உதவிகள் செய்துள்ளனர்.
மேலும் சித்தர் பொலிசில் சிக்காமல் இருக்க ஏதாவது உதவிகள் செய்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த சிபிசிஐடியில் உள்ள விபச்சார தடுப்புப் பிரிவு பொலிசார் சித்தர் கைது செய்யப்பட்ட தகவலை வெளியில் சொல்லாமல் மறைமுகமாக விசாரணை நடத்தினர்.
ஆனால் சட்டத்தரணிகள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளதால் தற்போது விசாரணை பல்வேறு கோணங்களில் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் சோக கதை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !