இரத்தினபுரி பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (02) இரவு 10 மணியளவில் இச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மர களஞ்சியசாலை ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றிய இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருடைய வாகனத்திற்கு பின்னால் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் வண்டி ஒன்றில் சென்ற நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளதோடு கூரிய ஆயுதத்தினால் தாக்கியும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !