அமெரிக்காவில் சிறையில் உள்ள பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 148 பெண் கைதிகளை, சிறை மருத்துவர்கள் வற்புறுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக புலனாய்வு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் 2006- 2010ம் ஆண்டுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மட்டும் சவுசில்லாவில் உள்ள வேல்லி பெண்கள் சிறையில் இருந்த கைதிகளுக்கும், கரோனாவில் உள்ள சிறை கைதிகளுக்கும் இந்த கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அறுவை சிகிச்சையை செய்வதற்காக மாநில அரசிடம் இருந்து எந்தவொரு முன் அனுமதியையும் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் சில பெண்கள் மீண்டும் குற்றம் செய்துவிட்டு, சிறைக்கு வரக்கூடும் என்பதால் அவர்களுக்கு மட்டுமே கருத்தடை செய்ததாக சிறைத்துறை வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !