ஐரோப்பிய நாடுகளில் குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டைகளை தானமாக அளிக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாட்டின் மனித இனப்பெருக்கம் மற்றும் கருவளர்ச்சியியல் கழகம், ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் 60 மருத்துவமனைகளில் கருமுட்டை தானம் அளித்த 1423 பேரிடம் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டைகளை தானமாக அளிக்கும் கலாசாரம் அதிகரித்திருந்தது தெரியவந்தது.
இவர்களில் பெரும்பாலானோர் பொதுநலம் கருதியே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஆயினும் பணத்துக்காகவும் இதில் பலர் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது. 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 46 சதவிகித பெண்களும், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 79 சதவிகித பெண்களும் சேவை நோக்கத்துடன் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 12 சதவிகிதத்தினரும், 35 வயதுக்கு மேற்பட்டவரில் ஒரு சதவிகிதத்தினரும் இத்தகைய காரியங்களில் வெறும் பணத்திற்காக மட்டுமே செயல்படுகின்றனர் என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது.
ஒரு பெண் சாதாரணமாக 10-லிருந்து 15 கருமுட்டைகளை அளிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கருமுட்டைத் தான கலாசாரம்!
Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 10:52 AM
Related articles
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
- பொருளாதாரம் முடங்கும் நிலை: ஒபாமா எச்சரிக்கை!
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
- நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !