ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்று முன்னர் இரணைமடு விமான ஓடுதளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மாங்குளம், அம்பகாமம் ஓலுமட ஊடாக அல்லது கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய இடங்களின் ஊடாக இரண்டு வழிகளிலும் சென்று விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் இரணைமடு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் இரணைமடு விமான ஓடுதளத்தைப் புனர்நிர்மாணிக்கும் பணிகள் விமானப் படையினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
விடுதலைப்புலிகள் தமது இலகு ரக விமானங்களை பறக்க விடுவதற்காக இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி வந்ததுடன், போர் நடைபெற்ற போது, விடுதலைப்புலிகள் அதனை முற்றாக அழித்திருந்தனர்.
இதனையடுத்து 2012 ஆம் ஆண்டு இந்த ஓடுதளம் விமானப்படையினரால் புதுபிக்கப்பட்டது.
சர்வதேச தரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த விமான ஒடுதளத்தின் நீளம் 1500 மீற்றர்களாகும். அகலம் 25 மீற்றர்களாகும்.
இந்த விமான ஒடுதளத்துடன் வடக்கில் உள்ள விமான ஓடுதளங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வவுனியா, மன்னார், பலாலி ஆகிய பிரதேசங்களில் விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !