அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 2 விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே சிங்கம் இந்திப் பதிப்பு பெரும் வசூலைக் குவித்தது.
அதாவது ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது என்பதால் 2ம் பாகத்தின் வசூல் குறித்தும் எதிர்பார்ப்பு உள்ளது.
சூர்யா நடிப்பி்ல் உருவான சிங்கம் படத்தைத்தான் அதே பெயரில் இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து இயக்கினர் ரோஹித் ஷெட்டி.
சென்னை எக்ஸ்பிரஸ் வசூல்:
பாலிவூட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த சென்னை எக்ஸ்பிரஸ் பாலிவூட்டில் வரலாற்றில் அதிக வசூலை குவித்த திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் இந்திய சினிமா சரித்திரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை சொந்தமாக்கியது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி ஷாருக்கானை திரையுலகில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. 2013ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலையும் இந்தப் படம் முறியடித்துள்ளது.இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே வசூலில் மூன்றாவது இடத்தைப் பெறுகின்றது என்று வர்த்தக ஆய்வாளரான தரன் ஆதர்ஷ் தன்னுடைய இணையதளச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று வாரத்தில் இந்தியாவில் மாத்திரம் அத்திரைப்படம் குவித்த மொத்த வசூல் ரூ.202.67 கோடி. முன்னதாக அமீர் கானின் 3 இடியட்ஸ் ரூ 202.47 கோடி வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. மூன்றாவது இடத்தில் சல்மான் கானின் எக் தா தைகர் திரைப்படம் ரூ.198.78 கோடி குவித்து சாதனை படைத்திருந்தது.
ஏற்கனவே பலநூற்றுக்கணக்கான தமிழ் காமர்ஷியல் திரைப்படங்களில் வந்த கதையை அப்படியே பாலிவூட்டுக்கு உல்டாவாக்கி உருவாக்கப்பட்ட படம் சென்னை எக்ஸ்பிரஸ்.
இப்படி ஒரு பக்கா காமர்ஷியல் படம் வெறும் பணம் பண்ண மட்டுமே எடுக்க முடியும். ஷாருக்கானின் நல்ல நடிப்புத் திறனை இப்படம் வீணடித்துவிட்டது என என ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன. ஆனால் அனைத்து விமர்சனங்களையும் தாண்டி கார்ஷியல் ரீதியில் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
சென்னை எக்பிரஸ் வெளியான நேரத்திற்கு வேறு எந்த பாலிவூட் முன்னணி நட்சத்திரத்தின் திரைப்படமும் வெளியாகததும் ஷாருக்கானுக்கு நல்ல வாய்ப்பாகிவிட்டது. பாகிஸ்தானினும் அதி கூடிய வசூலை அள்ளிக் குவித்த இந்திய திரைப்படமாக சாதனை படைத்திருக்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ் வெளியான நாளில் இருந்து வசூல் சாதனைகளை உடைத்து வந்தது. இதுவரை 100 கோடியை குறைவான நாட்களில் எட்டிய பெருமை சல்மான்கானின் ஏக் த டைகர் படத்துக்கு இருந்தது.
ஐந்து தினங்களில் அப்படம் 100 கோடியை எட்டியது.
சென்னை எக்ஸ்பிரஸ் நாலே நாளில் 100 கோடியை தாண்டியது.
அதேபோல் வெளிநாடுகளிலும் சென்னை எக்ஸ்பிரஸ் வசூலை குவித்து வருகிறது. அமீர்கானின் 3 இடியட்ஸ் 206.28 கோடிகளை வசூலித்திருந்ததே இதுவரை இந்திய சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையாக இருந்தது.
நேற்று முன்தினம் அதனை சென்னை எக்ஸ்பிரஸ் கடந்தது. இன்றுவரை 210 கோடியை தாண்டி அது வசூல் செய்துள்ளது. இதுதான் இன்றைய தேதியில் இந்திய சினிமாவின் அதிகபட்ச வசூல்.
கடந்த மே மாதம் திரைக்கு வந்த ஹிந்தியின் சாதனைப் படமான ஏ ஜவானி ஹேய் திவானியின் வசூலை தாண்டிவிடும் என்று கூறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ், விரைவில் ரூ. 211 கோடி வசூலைத் தாண்டவுள்ளது. இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது கருதப்படுகிறது. பெரிய நகரங்களான மும்பை,டெல்லி, பூனே, பெங்களூர் மட்டுமின்றி, திரையிடப்பட்ட சிறிய நகரங்களிலும் இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளிடப்பட்ட பிற நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, லண்டன் ஆகிய இடங்களிலும் இந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !