சீனாவின் சிசூவான் மாகாண செங்குடு நகரில் நேற்றிரவு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. 30 பேர் பயணித்த அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது.
அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த ஒருவன் தான் வைத்திருந்த கத்தியால் கண்மூடித்தனமாக பேருந்தில் இருந்தோர்களை வெட்டியும், குத்தியும் தாக்கினான்.
இதில் 10 வயது சிறுமி உள்பட 4 பயணிகள் கொல்லப்பட்டனர். மற்ற 11 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. உடனடியாக ஓட்டுனர், பயணிகள் தப்பித்து செல்லும் நோக்கில் பேருந்தை நிறுத்திவிட்டு கதவை திறந்துவிட்டார். ஆனால், கீழே இறங்கிய அவன் கையில் இருந்த கத்தியை சுழற்றி வீசினான். பின்னர் ஓட்டுனரும் அங்கிருந்த மக்களும் அவனை நெருங்கினர். உடனே செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார், காலில் துப்பாக்கியால் சுட்டு அவனை பிடித்தனர். படுகாயமடைந்த 11 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
41 வயதான லீ என்ற அந்த தாக்குதல் குற்றவாளி, வீட்டில் பணம் பிரச்சினை காரணமாக பெற்றோர்களுடன் சண்டை போட்டுவிட்டு வந்தான் என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தும் இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் வெளியிடப்படவில்லை.
இதுபோன்று ஹெனான் மாகாணத்தில் இந்த மாத தொடக்கத்தில் பேருந்தில் ஒருவன் கத்தியால் தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீன பஸ் பயணிகளுக்கு கத்திக்குத்து.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !