
இப்போட்டி சம நிலையில் முடிவுற்றதை அடுத்து, 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றிக் களிப்பில் இருந்த இங்கிலாந்து வீரர்கள், மைதானத்தில் அமர்ந்து குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது உற்சாக மிகுதியில் ஸ்டுவார்ட் பிராட், கெவின் பீட்டர்சன் மற்றும் ஜிம்மி ஆண்டர்சன் ஆகியோர், ஆடுகளத்தில் சிறுநீர் கழித்ததாக அவுஸ்திரேலிய நிருபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போட்டி முடிந்து 5 மணி நேரம் கழித்து விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகும் வீரர்கள் ஆடுகளத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தை தொடர்ந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருள்சூழ்ந்த ஆடுகளத்தில் அமர்ந்து வீரர்கள் பீர் அருந்தியதாகவும், இது ஆசஷ் தொடரில் சிறந்த தருணம் என்றும் விக்கெட் கீப்பர் பிரையர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு பற்றி ஆய்வு செய்யப்படும் என்று இங்கிலாந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹக் ராபர்ட்சன் தெரிவித்தார். அவ்வாறு நடந்திருந்தால் அது நல்ல நடத்தையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அணியின் பயிற்சியாளர் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
பாதுகாப்பு ஊழியர்கள் மேல் சிறுநீர் கழித்த கிரிக்கெட் வீரர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !