உலாவியாக மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்ட பயர்பொக்ஸ் மொபைல்களுக்கான இயங்குதளமொன்றை உருவாக்கியுள்ளது.
Boot to Gecko (B2G) என்ற மொஸிலாவின் திட்டத்தின் கீழ் இவ் இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ZTE நிறுவனத்தின் பயர்பொக்ஸ் இயங்குதளம் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட் போனானது ஈபே இணையத்தளத்தில் முதன்முறையாக விற்பனைக்கு வரவுள்ளது.
இதன் விலை 59.99 பவுண்ஸ்களாகும். எனினும் இது குறித்த வலையமைப்புக்கு லொக் செய்யப்பட்டதாக இருக்காது என ZTE தெரிவிக்கின்றது.
எச்.டி.எம்.எல் 5 இணை அடிப்படையாகக் கொண்டு இதன் அப்பிளிகேசன்கள் இயங்குகின்றன. பயர்பொக்ஸ் மொபைலானது புதிய அலைகளை ஏற்படுத்தும் என அதன் உருவாக்குனர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஸ்மார்ட்போனாது ஏற்கனவே ஸ்பெய்ன், கொலம்பியா மற்றும் வெனிசூலாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இது 3.5 அங்குல திரையைக் கொண்டிருப்பதுடன் 3.2 மெகா பிக்ஸல் கெமராவையும் கொண்டுள்ளது.
இதுதவிர 1.5 GHz புரசசரையும் கொண்டுள்ளது.
மொஸிலா நிறுவனத்தின் பயர்பொக்ஸ் உலாவி பலராலும் விரும்பி உபயோகிக்கப்படுகின்றது. இணையத்தில் மைக்ரோசொப்டின் இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கம் நிறைந்திருந்த காலப்பகுதியில் தைரியமாக புகுந்து வெற்றிகண்ட உலாவியாக பயர்பொக்ஸினை அடையாளப்படுத்தலாம். ஒப்பெரா உலாவியால் முடியாததை பயர்பொக்ஸ் செய்துகாட்டியது. பயர்பொக்ஸின் திறந்து விட்ட வழியினாலேயே கூகுளின் குரோம் வெகுவாக உலாவிச் சந்தையில் முன்னேறியது என்று கூடக் கூறலாம்.
உலாவியில் புதுமைகளைப் புகுத்திய பயர்பொக்ஸ் மொபைல் இயங்குதளச் சந்தையிலும் சாதிக்கின்றதா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Home »
Technology
» ஈபேயில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் பயர்பொக்ஸ் ஸ்மார்ட் போன்.
ஈபேயில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் பயர்பொக்ஸ் ஸ்மார்ட் போன்.
Written By TamilDiscovery on Tuesday, August 13, 2013 | 11:06 PM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !