உலகஅளவில் கடந்த பத்து ஆண்டுகளில் 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில் 19 விபத்துக்கள் பெரிய அளவிலானவை. இந்த 22 விபத்துக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும்.
பாறையில் மோதிய யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்:
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்-செயின்ட் பால் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 2006ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. பாறையில் சிக்கி மோதியது அந்தக் கப்பல்.
தமர் ஆற்றில்:
பிளைமவுத் அருகே தமர் நதியில் போய்க் கொண்டிருந்தபோது இது விபத்தில் சிக்கியது. மனித தவறே இதற்குக் காரணம் என்று சமீபத்தில் கூறப்பட்டது.
9 அமெரிக்க்க கப்பல்கள்:
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த 22 விபத்துக்களில் 9 விபத்துக்கள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சந்தித்தவை ஆகும்.
5 ரஷ்யக் கப்பல்கள்:
ரஷ்யாவைச் சேர்ந்த 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த காலகட்டத்தில் விபத்தை சந்தித்துள்ளன.
5 இங்கிலாந்துக் கப்பல்கள்:
இதுதவிர நான்கு இங்கிலாந்துக் கப்பல்கள், சீனா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த தலா ஒரு கப்பலும் விபத்தை சந்தித்துள்ளன.
தரை தட்டிய இங்கிலாந்துக் கப்பல்:
இங்கிலாந்தின் எச்எம்எஸ் அஸ்டிடியூட் என்ற நீர்மூழ்கிக் கப்பல் அக்டோபர் 1ம் தேதி ஸ்கை என்ற இடத்தில் தரை தட்டியது.
கப்பலுக்குள் ஒரு கொலை:
சில மாதங்களுக்குப் பின்ன்னர் இக்கப்பலுக்குள் ஒரு பயங்கரம் நடந்தது. அதாவது 36 வயதான லெப்டினென்ட் கமாண்டர் இயான் மொலினெக்ஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கப்பல் ஊழியர் ரியான் டோனவன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 ஊழியர்களைக் கொல்ல முயன்றதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
2003ல் மூழ்கிய மிங் 361:
2003ம் ஆண்டு மிங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியது. இது சீனக் கப்பலாகும். அதில் கப்பலில் இருந்த 70 பேரும் உயிரிழந்தனர். சீன வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசமான விபத்தாகும் இது.
ரஷ்யாவின் நெர்பா:
2008ம் ஆண்டு ரஷ்யாவின் கே 152 நெர்பா என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த போர்க் கருவிகள் திடீரென வெடித்ததால் 14 சிவிலியன் பணியாளர்கள் உயிரிழந்தனர். 21 கடற்படை வீரர்கள் காயமடைந்தனர்.
விலாடிவாஸ்டாக் சம்பவம்:
ரஷ்யாவின் விலாடிவாஸ்டாக்கில் நடந்த ஒரு சம்பவத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 21 பேர் விஷத் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !