உள்நாட்டுப் போர், கலவரங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஓர் அமைதிப்படையை உருவாக்கி நிர்வகித்து வருகிறது.
இந்த அமைதிப்படையின் ஆலோசகராக இருந்த செனகல் நாட்டின் லெட்டினென்ட் ஜெனரல் பபகார் கயே கடந்த (ஜூலை) மாதம் ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து, ஐ.நா. அமைதிப்படையின் புதிய ஆலோசகராக பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினென்ட் ஜெனரல் மக்சூத் அஹமத் என்பவரை புதிய ஆலோசகராக நியமித்து பான் கி - மூன் அறிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மக்சூத் அஹமத், 2005 - 2006க்கிடையே காங்கோ நாட்டில் ஏற்பட்ட கலவரத்தை அடக்கச் சென்ற அமைதிப்படை பிரிவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !