ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சைபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே மது போதையில் இருந்த ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார.
இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
இந்த அசம்பாவிதத்தையடுத்து பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் ரமித் ரம்புக்வெல மன்னிப்பு கோரியுள்ளார்.
எனினும் தவறுதலாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
கெஹலிய ரம்புக்வெலவின் மகனே விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார்!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 12:43 PM
Related articles
- 2020 ஒலிம்பிக் போட்டிகளை கோலாகலமாக நடத்தப்போகும் ஜப்பான்.
- நான் சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு கெட்டவன்: மைக் டைசன் உருக்கம்!
- வெற்றிக் களிப்பில் மைதானத்தில் சிறுநீர் கழித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்: பரபரப்பு குற்றச்சாட்டு!
- உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா சாதனை.
- வெற்றிகளின் சிகரம் சச்சின் ஓய்வு பெறுகிறார்!
- மீண்டும் வருவேன்: ஸ்ரீசாந்த்தின் சூளுரை!
Labels:
Sport
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !