Headlines News :
Home » » 'உத்தரகாண்ட்' மழை வெள்ளத்தில் காணாமல் போன 3 ஆயிரத்து 64 பேரின் நிலை?

'உத்தரகாண்ட்' மழை வெள்ளத்தில் காணாமல் போன 3 ஆயிரத்து 64 பேரின் நிலை?

Written By TamilDiscovery on Friday, July 5, 2013 | 3:16 AM

உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் காணாமல் போன 15ம் திகதிக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இறந்தவர்களாக கருதப்படுவர் என உத்தரகாண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 15ம் திகதி ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பல ஆயிரம் பேர் பலியானதாக கருதப்படுகிறது. மலை பகுதிகளில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், டேரா டூனில் முதல்வர் விஜய் பகுகுணா நேற்று அளித்த பேட்டியில், ‘‘உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் 3 ஆயிரத்து 64 பேரை காணவில்லை. இவர்களை கண்டுபிடிக்க வரும் 15ம் திகதி வரை கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இறந்தவர்களாக கருதப்ப டுவார்கள். பின்னர், அவர்களின் உறவினர்களுக்கு 30ம் திகதிக்குள் இழப்பீடு வழங்கப்படும்’’ என்றார். மழை வெள்ளத்தால் கேதார்நாத் கோயிலை சுற்றி பலத்த சேதம் ஏற்பட்டது. கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான பக்தர்கள் இறந்து கிடந்தனர்.

அவர்களின் உடல்கள் அகற்றப்பட்டு எரிக்கப்பட்டன. இந்நிலையில் கேதார்நாத் கோயிலை சுத்தப்படுத்த உத்தரகாண்ட் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக துப்புரவு தொழிலாளர்கள் 70 பேரை, விமானப்படை ஹெலிகாப்டர்கள் நேற்று ஏற்றி சென்றன. அவர்கள் கோயிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template