ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கான சர்வேதச கால்பந்து போட்டி நேற்று வெற்றிகரமாக தொடங்கியது.
பிரித்தானியாவில் டின்வோல்ட் ஹில் (Tynwald Hill) பன்னாட்டு உதைபந்தாட்டப் போட்டியில் உலகம் முழுவதும் உள்ள தமிழ்த்தேசிய இனமக்களின் சார்பில் கலந்து கொண்ட தமிழீழ அணியினர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
தமிழீழ அணி சீலான்ட் அணியுடன் மோதி இந்தபோட்டியை தொடங்கினார்கள்.
போட்டியில் பங்குபெற்றியவர்களின் விபரம் பின்வருமாறு.
உமேஷ் சுந்தரலிங்கம் (பந்து காப்பாளன் ) 1
சிவரூபன் சத்தியமூர்த்தி (தடுப்பாளன்) 5
கெவின் நாகேந்திரா (தடுப்பாளன்) 18
அருண் விக்னேஸ்வராஜா (தடுப்பாளன்) 6
மதன்ராஜ் உதயணன் (மத்திய விளையாட்டுனர்) 14
கஜேந்திரன் பாலமுரளி (மத்திய விளையாட்டுனர் ) 15
மஹி நம்பியார் (மத்திய விளையாட்டுனர்) 10
ரொன்சன் வல்லிபுரம் (மத்திய விளையாட்டுனர்) 12
பிரஷாந்த் ராகவன் (எல்லை விளையாட்டுனர்) 20 (துணை அணித்தலைவர்)
கவிந்தன் நவநீதகிருஷ்ணன் (எல்லை விளையாட்டுனர்) 9
மஜூரன் ஜெகநாதன் (முன்னேறி விளையாட்டுனர்) 7 அணித்தலைவர்
பனுஷந்த் குலேந்திரன் (முன்னேறி விளையாட்டுனர்) 8
ஷாசில் நியாஸ் (முன்னேறி விளையாட்டுனர்) 4
மக்கள் நினைத்ததை விட தமிழீழ அணியினர் மிக உற்சாகமாக தமது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். இவர்களின் மிரட்டலான பந்து ஆளுமையால் எதிர் அணியினர் திக்குமுக்காடி போனதை கண்டு எமது ரசிகர்கள் பரவசம் அடைந்த காட்சிகள் ஏராளம்.போட்டி அரை சுற்றில் தமிழ் ஈழ அணி 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் சீலான்ட் அணியினர் 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் கொண்டு இருந்தனர்.
போட்டி இறுதியில் சீலான்ட் அணியினர் 3 உதைபந்தாட்ட இலக்குகளையும் தமிழ் ஈழ அணியினர் 5 உதைபந்தாட்ட இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியை வெற்றிகொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி உள்ளனர்.
உதைபந்தாட்ட இலக்கு அடித்த தமிழீழ அணி வீரர்களின் விபரம் வருமாறு:
பனுஷந்த் 2 உதைபந்தாட்ட இலக்குகளையும் (முதலாவது, இரண்டாவது) மயூரன் 3வது உதைபந்தாட்ட இலக்கையும் மதன்ராஜ் 4வது உதைபந்தாட்ட இலக்கையும் பிரஷாந்த் 5வது உதைபந்தாட்ட இலக்கையும் கைப்பற்றி கொண்டனர். தமிழீழ அணியின் விளையாட்டு திறனை கண்ட மற்ற அணியினர் எமது அணி வீரர்களை பாரட்டியும் இனி வரும் போட்டிகளில் எமது அணி மிக பெரிய சவாலாக அமையும் என்று கூறி உள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !