Headlines News :
Home » » சிங்கம்-2இற்கு எதிராக ஆசிரியர்கள் போர்க்கொடி: ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்கள்!

சிங்கம்-2இற்கு எதிராக ஆசிரியர்கள் போர்க்கொடி: ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்கள்!

Written By TamilDiscovery on Sunday, July 7, 2013 | 4:39 AM

நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-2 படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மதுரையில் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மாசானம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொருளாளர் அனந்தராமன், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க செயலாளர் பாஸ்கரன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் நாகசுப்ரமணியன், செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.

இதில் பேசிய ஆசிரியர்கள், "நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-2 படத்தில் ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களை, "காமெடி´ என்ற பெயரில் கொச்சைப்படுத்துவதும், தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்த அரசை குறைகூறுவது போலவும் வசனங்கள் உள்ளன.

அந்தக் காட்சிகளை முழுமையாக நீக்க வேண்டும். தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையெனில் படத்தை தடை செய்யும்படி, தமிழக அரசு மற்றும் நீதிமன்றை அணுகுவது, என ஆவேசமுற்றனர். இதை வலியுறுத்தி, தீர்மானமும் நிறைவேற்றினர்.
Share this article :

1 comment:

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template